ஆயுஷ்
பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளுதல்
Posted On:
14 DEC 2021 5:25PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஆயுஷ் அடிப்படையிலான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை ஆயுஷ் அமைச்சகம் மேம்படுத்துவதோடு, "சுபோஷித் பாரத்" (ஊட்டமளிக்கும் இந்தியா) இறுதி இலக்கை அடைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
ஆயுஷ் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து பயன்களை மேம்படுத்துவதற்காக “ஊட்டச்சத்து குறைபாடில்லா இந்தியாவுக்கான ஆயுஷ் உணவுமுறை ஆலோசனை" என ஒரு கூட்டு ஊட்டச்சத்து வழிகாட்டுதலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த வழிகாட்டுதல் அங்கீகரிக்கப்பட்டு, இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நிறுவனங்கள்/ஆராய்ச்சி கவுன்சில்கள் மற்றும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச ஆயுஷ் துறைகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதம் மற்றும் ஊட்டச்சத்து இருவார கொண்டாட்டத்தில் அமைச்சகம் பங்கேற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781398
***************
(Release ID: 1781530)
Visitor Counter : 105