சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்.
Posted On:
14 DEC 2021 4:36PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் .வீரேந்திர குமார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டத்தை மதிப்பாய்வு செய்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் நலனுக்காக அடல் வயோ அபியுதாய் யோஜனா என அதை மறுபெயரிட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம்.
* மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம்..
* ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா.
* மூத்த குடிமக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் திறன் முயற்சிகள்.
* வெள்ளி பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
* முதியோர் பராமரிப்புக்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை முறைபடுத்துதல்.
*மூத்த குடிமக்களின் நலனுக்கான விழிப்புணர்வு மற்றும் திறனை வளர்ப்பதற்கான திட்டம் - பயிற்சி, விழிப்புணர்வு, உணர்திறன், மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் அமைத்தல்.
2021-22-ம் ஆண்டில் இதுவரை மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் மற்றும்
ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனாவின் கீழ் முறையே 96530 மற்றும் 19431 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781358
***************
(Release ID: 1781523)