மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 DEC 2021 4:57PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்சோத்தம் ரூபாலா எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் கால்நடைகளின் நலனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அவசியம். ஆனால், இவை மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாட்டில் தற்போது 54 அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 2020ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் 85,392 பேர் உள்ளனர்.
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில்(விசிஐ) கடந்த 1984ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது கால்நடை மருத்து கல்விக்கான விதிமுறைகளை உருவாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781382
************