சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
யாசகம் கேட்போரின் விரிவான மறுவாழ்வுக்கான திட்டம் 2021
Posted On:
14 DEC 2021 4:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு வீரேந்திர குமார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
"ஸ்மைல்- விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு" என்ற திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
'யாசகம் கேட்பதில் ஈடுபடும் நபர்களின் விரிவான மறுவாழ்வுக்கான மத்தியத் துறை திட்டம்' இதன் துணை திட்டமாகும். யாசகம் கேட்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கான நல நடவடிக்கைகள் உட்பட பல விரிவான நடவடிக்கைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.
மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனைகள், அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார இணைப்புகள் மற்றும் பலவற்றில் இத்திட்டத்தின் வாயிலாக கவனம் செலுத்தப்படுகிறது.
ஸ்மைல் திட்டத்தின் கீழ் 2021-22-ல் ரூ 10 கோடி, 2022-23-ல் ரூ 15 கோடி, 2023-24-ல் ரூ 20 கோடி, 2024-25-ல் ரூ 25 கோடி, 2025-26-ல் ரூ 30 கோடி என மொத்தம் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781355
*****
(Release ID: 1781469)
Visitor Counter : 223