சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் முன்னேற்றம்

Posted On: 14 DEC 2021 2:12PM by PIB Chennai

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழுநோயை பொது சுகாதாரப் பிரச்சனையிலிருந்து இந்தியா வெற்றிகரமாக ஒழித்துள்ளது. அதாவது தேசிய அளவில் 10,000 மக்களுக்கு ஒருவருக்கு குறைவாக இந்த நோய் உள்ளது என்பதே இதன் பொருளாகும்.

2030 ஆம் ஆண்டு வாக்கில்  ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழுநோயை இல்லாமல் செய்வதே தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் 2014-15 ஆம் ஆண்டு 1 லட்சம் மக்கள் தொகைக்கு 9.73 என்னும் அளவில் புதிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அது 2021-22 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை 4.74 ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781264

****



(Release ID: 1781349) Visitor Counter : 684


Read this release in: English