திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் மேம்பாட்டு திட்டம்: தமிழகத்தில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றோர் விவரம்

Posted On: 13 DEC 2021 3:46PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கைவினைஞர் பயிற்சி திட்டத்திற்காக பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் திட்டம் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் வேலைவாய்ப்புக்காகப் பயிற்சி அளித்த இளைஞர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 2.0 மற்றும் 3.0-வின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் 20,40,206 மற்றும் 7,04,220 பேரும், 2019-20-ல் 45,65,306 மற்றும் 6,08,389 நபர்களும், 2020-21-ல் 19,61,011 மற்றும் 2,16,102 பேரும், 2021-22-ல் 3,57,272 மற்றும் 1,23,747 பேரும் முறையே பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 2.0 மற்றும் 3.0-வின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ல் 1,23,422 மற்றும் 42,080 பேரும், 2019-20-ல் 1,85,108 மற்றும் 34,263 நபர்களும், 2020-21-ல் 72,404 மற்றும் 6,016 பேரும், 2021-22-ல் 13,563 மற்றும் 2,544 பேரும் முறையே பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் 167283 பேரும், 2019-20-ல் 415332 நபர்களும், 2020-21-ல் 359796 பேரும், 2021-22-ல் 120083 பேரும் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ல் 4329 பேரும், 2019-20-ல் 14244 நபர்களும், 2020-21-ல் 11727 பேரும், 2021-22-ல் 3217 பேரும் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் .

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் 3358 பேரும், 2019-20-ல் 37312 நபர்களும், 2020-21-ல் 210460 பேரும், 2021-22-ல் 112287 பேரும் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2018-19-ல் 425 பேரும், 2019-20-ல் 3281 நபர்களும், 2020-21-ல் 14955 பேரும், 2021-22-ல் 9485 பேரும் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-ல் 1455430 பேரும், 2019-ல் 1424239 நபர்களும், 2020-ல் 1335679 பேரும் இணைந்துள்ளனர்.

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-ல் 42934 பேரும், 2019-ல் 36470 நபர்களும், 2020-ல் 30045 பேரும் இணைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780906

                                                                                         *************

 

*

 

 



(Release ID: 1781064) Visitor Counter : 642


Read this release in: English