வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5,809 பொலிவுறு நகரத் திட்டங்களில் 2021 நவம்பர் வரை அமலாக்கம் / நிறைவடைந்தவை

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2021 3:49PM by PIB Chennai

2015 ஜூன் 25 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் 2021 நவம்பர் 12 நிலவரப்படி, ரூ.1,84,998  கோடி  மதிப்பிலான 6,452 திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.  இவற்றில் ரூ. 1,56,571 கோடி மதிப்புள்ள 5,809 திட்டங்கள் அமலாக்கத்திலும் / நிறைவடைந்தும் உள்ளன. 

பொலிவுறு நகரத் திட்ட அமலாக்க காலம் 2023 ஜூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தத் திட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தத் திட்டங்களுக்கு 2021 நவம்பர் 12 நிலவரப்படி மத்திய அரசு ரூ.27,359.60 கோடி விடுவித்துள்ளது.  இதில், ரூ.22,467.81 கோடி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுவித்த தொகை மற்றும் பயன்படுத்தப்பட்ட தொகை விவரம்:

நகரின் பெயர்

விடுவிக்கப்பட்ட தொகை (ரூ.கோடியில்)

பயன்படுத்தப்பட்ட தொகை (ரூ.கோடியில்)

சென்னை

497.62

385.53

திருச்சிராப்பள்ளி

294.00

290.00

திருநெல்வேலி

294.00

241.50

திண்டுக்கல்

2.00 (பொலிவுறு நகரத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை)

2.00

தஞ்சாவூர்

294.00

289.00

திருப்பூர்

392.00

383.76

சேலம்

392.00

342.00

வேலூர்

343.00

289.19

கோயம்புத்தூர்

490.00

389.77

மதுரை

392.00

289.28

ஈரோடு

294.00

284.70

தூத்துக்குடி

294.00

191.23

 

புதுச்சேரிக்கு விடுவிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.111.00 கோடி, பயன்படுத்தப்பட்ட தொகை ரூ.40.04 கோடி. 

மாநிலங்களவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு கௌஷல் கிஷோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780910

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1781050) வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க: English