பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு சாதனங்களும், மேக் இன் இந்தியா திட்டமும்
Posted On:
13 DEC 2021 2:59PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் அமர் பட்நாயக் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் மூலம் ஏராளமான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 155 எம்.எம். பீரங்கி தனுஷ், பாலம் அமைக்கும் டேங்க், இலகு ரக போர் விமானம் தேஜஸ், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவகணை, ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிகப்பல், ரோந்து படகுகள், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கண்காணிப்பு கப்பல், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள், அர்ஜூன் கவச வாகனம், டி-72 பீரங்கி வானகங்களுக்கான தெர்மல் இமேஜிங் கருவிகள், அதிவிரைவு படகுகள், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் காந்தேரி போர்க்கப்பல்கள், குண்டு துளைக்காத கவச வாகனம், லக்ஷ்யா பாராசூட் போன்றவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780866
***************
(Release ID: 1781034)