பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2020-21ம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.8,434.84 கோடி:

Posted On: 13 DEC 2021 2:53PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2014-15ம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் ரூ.1940.64 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2020-21ம் நிதியாண்டில் ரூ.8, 434.84 கோடியாக உயர்ந்துள்ளது. யுக்தி காரணங்களுக்காக, ராணுவ தளவாட பொருட்களின் பெயர்களை  வெளியிட முடியாது.

ராணுவ தளவாட ஏற்றுமதிகளை அதிகரிக்க கடந்த 5 ஆண்டுகளில் பல சீர்த்திருத்தங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  ஏற்றுமதிக்கான ஒப்புதல்கள் முழுவதும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான செயல்பாட்டு விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒரே  மாதிரியான பொருட்களுக்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கும்போதுஉடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க, நட்பு நாடுகளுடன் இணைய கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆயுத தொழிற்சாலைகளில் தன்னாட்சி, திறன், மற்றும் புத்தாக்கத்தை அதிகரிக்க 41 ஆயுத தொழிற்சாலைகள், 7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780863

                                                                          *******************

 

 


(Release ID: 1781030) Visitor Counter : 242
Read this release in: English