ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருந்துகளின் தரம்
प्रविष्टि तिथि:
10 DEC 2021 5:07PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வாசனைத் திரவியங்களின் தரம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பை ஒழுங்கு முறைப்படுத்துகிறது. நாட்டில் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மேற்கொண்டு வருகின்றன.
மருந்துகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டத்தின் கீழ் கலப்பட மருந்துகள் மற்றும் போலி மருந்துகளை உற்பத்தி செய்பவர்களுக்கு அபராதமும், ஜாமீனில் வெளிவரமுடியாத தண்டனையும் வழங்கப்படுகிறது.
மருந்துகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைந்து முடிக்க தனி நீதிமன்றங்களை அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 33 மாநிலங்கள், தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளன. 2008-ல் 111 ஆக இருந்த பணியிடங்களின் எண்ணிக்கை 2021 ஜனவரியில் 492 ஆக அதிகரிக்கப்பட்டது. மருந்து மாதிரிகளை பரிசோதிக்கும் மத்திய மருந்துகள் பரிசோதனைக் கூடங்களின் திறன் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780181
----
(रिलीज़ आईडी: 1780347)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English