சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை: மக்களவையில் தகவல்

Posted On: 10 DEC 2021 4:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், பேரிடர் மற்றும் பெருந்தொற்று தயார்நிலையின் ஒரு பகுதியாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கன்டெய்னர் அடிப்படையிலான மருத்துவமனைகள் இரண்டை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் அல்லது பெருந் தொற்று பரவும் காலங்களில், இவற்றை தேவையான  இடங்களுக்கு குறுகிய நேரத்தில் கொண்டு சென்று மருத்துவ வசதியை ஏற்படுத்த முடியும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 602 மாவட்டங்களில் அவசர சிகிச்சை மருத்துவமனைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

ரூ.64,180 கோடி திட்ட மதிப்பில் பிரதமரின் - ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிகளவில் முதலீடு செய்யப்படும். 2022 டிசம்பருக்குள் 1,50,000 ஆயுஷ்மான் சகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்றப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780149

                                                                                     *************


(Release ID: 1780333) Visitor Counter : 163
Read this release in: English