விவசாயத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        நாட்டின் பருப்பு வகைகளின் மொத்த உற்பத்தி 25.72 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பீடு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 DEC 2021 6:51PM by PIB Chennai
                
                
                
                
                
                
                புதுதில்லி, டிசம்பர் 10, 2021 
நாட்டின் பருப்பு வகைகளின் மொத்த உற்பத்தி 25.72 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும், பருப்பு வகைகளில் தேவை 26.05 மில்லியன் டன்னாக இருக்கும் எனவும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
இது  தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில்,  தேசிய புள்ளியியல் அலுவலகமான என்எஸ்ஒ  மேற்கொண்ட வீட்டு நுகர்வோர் செலவு குறித்த கணக்கெடுப்பின்படி கிராமப்புறத்தில் உள்ள நபர் ஒருவருக்கு, மாதம் ஒன்றுக்கு பருப்பு பொருட்களின் நுகர்வு 0.737 கிலோ கிராம் எனவும் நகர்ப்புறத்தில் உள்ள நபருக்கு  இது 0.845 கிலோ கிராமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780270 
     
----
                
                
                
                
                
                (Release ID: 1780321)
                Visitor Counter : 207