பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

வரதட்சணை தடை சட்டத்தால், வரதட்சணை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன : மக்களவையில் தகவல்

Posted On: 10 DEC 2021 3:59PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

தேசிய குற்ற ஆவணக்  காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம்ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில், வரதட்சணை  மரணங்கள்  தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை  தடை  சட்டத்தின் கீழ்  குற்றங்கள் குறைந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780110

                                                                          *************

 



(Release ID: 1780315) Visitor Counter : 245


Read this release in: English