சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள சுகாதார திட்டங்கள் : 2020-21ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.1522.71 கோடி வழங்கியது மத்திய அரசு
प्रविष्टि तिथि:
10 DEC 2021 4:26PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனை ஆகியவை மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மருத்துவமனைகளை வலுப்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்குகிறது.
மகப்பேறு சுகாதாரம், குழந்தை ஆரோக்கியம், பதின்வயதினரின் சுகாதாரம், குடும்ப கட்டுப்பாடு, உலகளாவிய நோய் தடுப்பு திட்டம், காசநோய் போன்ற முக்கிய நோய்கள், மலேரியா, டெங்கு, காலா அசார், தொழுநோய் போன்றவற்றுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படுகிறது.
ஜனனி சிசு சுரக்ஷா திட்டம், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்யா திட்டம், இலவச மருந்துகள் திட்டம், இலவச பரிசோதனை சேவைகள், நடமாடும் மருத்துவ வசதிகள், தொலைதூர மருந்துவ சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், தேசிய டையாலிசிஸ் திட்டம் போன்றவையும், தேசிய சுகாதார திட்டம் ஆதரவுடன் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. உள்ள மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் மூலம் நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1522.71 கோடியை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780140
**************
(रिलीज़ आईडी: 1780299)
आगंतुक पटल : 479
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English