சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        1563 பிஎஸ்ஏ (அழுத்தம் மாற்றுத்துக்குகேற்ப உறிஞ்சுதல்)
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 DEC 2021 4:30PM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: 
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 1563 பிஎஸ்ஏ (அழுத்தம் மாற்றுத்துக்குகேற்ப உறிஞ்சுதல்)ஆக்சிஜன் உற்பத்தி  நிலையங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் 1463 நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 
பிரதமரின் நல நிதியிலிருந்து, நாட்டின்  மாவட்டங்களில்  1,225 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 338 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் நிலையங்கள் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
தமிழகத்துக்கு மொத்தம் 77 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் நிலையங்களும், புதுச்சேரிக்கு 8 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் நிலையங்களும் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறி ப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780145
                                          *********************
 
                
                
                
                
                
                (Release ID: 1780295)
                Visitor Counter : 156