ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைத்தல்

Posted On: 10 DEC 2021 5:06PM by PIB Chennai

உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் ரசாயன உரங்கள் மற்றம் பூச்சி மருந்துகளின் பயன்பாட்டுக்கு பதிலாக இயற்கை விவசாயத்தை மத்திய அரசு பிரபலப்படுத்தி வருகிறதுபாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும்   இயற்கை விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவிவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதில், விதைகள், உயிரி உரங்கள், உயிரிப் பூச்சிக் கொல்லி மருந்துகள் இயற்கை உரம், மண்புழு உரம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்கள் வாங்க ரூ. 31,000 மூன்று ஆண்டுகளுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் முறையே 11,10,332 மெட்ரிக் டன், 9,17,602 மெட்ரிக்டன், 11,81,116.10 மெட்ரிக் டன், இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780179

----



(Release ID: 1780260) Visitor Counter : 372


Read this release in: English