பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி

प्रविष्टि तिथि: 10 DEC 2021 3:47PM by PIB Chennai

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 2016-17 முதல் 2018-19 வரையிலான காலத்தில்  ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

2016-17-ல் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.1521.91 கோடியாகவும், 2017-18-ல் ரூ.4682.36 கோடியாகவும் இருந்தது. 2018-19-ல் ஏழு மடங்கு அதிகரித்து ரூ.10745.77 கோடியாக உயர்ந்தது.

2019-20-ல் ஏற்றுமதி மதிப்பு 9115.55 கோடியாகவும்,2020-21-ல் 8434.84 கோடியாக இருந்தது என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் திரு மனோஜ் கோடக் மற்றும் சிலரின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரி்வித்தார்.

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை அதிகரிக்க நட்பு நாடுகளுடன்  தொடர்ச்சியாக இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட வி்சாரணைகள் உள்பட ஏற்றுமதி தொடர்பான செயல்பாட்டை பின் தொடரவும் ஒருங்கிணைப்பு செய்யவும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் தனிப்பிரிவு ஒன்று  அமைக்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780095

                                                                                                    ********


(रिलीज़ आईडी: 1780235) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English