நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகம் மற்றும் தேசிய அளவில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கரும்புக்கட்டணம் மற்றும் நிலுவைத்தொகை விவரங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2021 3:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கரும்பு விலையை சர்க்கரை ஆலைகள் வழங்குவது தொடர் நடவடிக்கையாகும். 2016-17, 2017-18, 2018-19, 2019-20 & 2020-21 ஆகிய சர்க்கரைப் பருவங்களில், கரும்பு விவசாயிகளுக்கு அகில இந்திய அடிப்படையில் வழங்கப்பட்ட கரும்புக்கான தொகை முறையே ரூ. 55340 கோடி, ரூ. 83629 கோடி, ரூ. 86617 கோடி, ரூ. 75907 கோடி மற்றும் ரூ 92881 கோடி ஆகும்.

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், 2016-17, 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய சர்க்கரை பருவங்களுக்கான விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை, 06.12.2021 நிலவரப்படி,முறையே ரூ.65 கோடி, ரூ. 185 கோடி, ரூ. 365 கோடி, ரூ. 130 கோடி மற்றும் ரூ. 4445 கோடி எனக் குறைந்துள்ளது.

 

தமிழகத்தை பொறுத்தவரை, 2016-17-ல் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 2747 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 2730 கோடி ஆகவும், நிலுவை ரூ 17 ஆகவும் இருந்தது. 2017-18-ல் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 2110 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 2050 கோடி ஆகவும், நிலுவை ரூ 60 ஆகவும் இருந்தது.

2018-19-ல் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 2839 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 2766 கோடி ஆகவும், நிலுவை ரூ 73 கோடி ஆகவும் இருந்தது. 2019-20-ல் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 2418 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 2418 கோடி ஆகவும், நிலுவை 0 ஆகவும் இருந்தது. 2020-21-ல் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 2672 கோடி ஆகவும், வழங்கப்பட்ட தொகை ரூ 2647 கோடி ஆகவும், நிலுவை ரூ 25 கோடி ஆகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780088

                                                                        *****


(வெளியீட்டு அடையாள எண்: 1780173) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: English