மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ 2602.66 லட்சம் மானியம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2021 2:12PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) மூலம் செப்டம்பர் 2010 முதல் மார்ச் 2020 வரை பால் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள 90,616 பயனாளிகளுக்கு ரூ 55,086.76 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் 9512 பயனாளிகளுக்கு ரூ 2602.66 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் 293 பயனாளிகளுக்கு ரூ 52.05 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780043

----


(வெளியீட்டு அடையாள எண்: 1780169) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu