ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவுநீர் மேலாண்மை: தமிழ்நாட்டில் 63 சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன

Posted On: 09 DEC 2021 5:27PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு

கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் கீழ், ரூ 34,081 கோடி மதிப்பிலான 883 கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் தொடங்கப்பட்டன. இவற்றில் ரூ 8,258 கோடி மதிப்பிலான 370 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

 

2001 அக்டோபரில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 கீழ், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை நிறுவுதல் போன்ற கழிவுநீர்/பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்களுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 15883 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நாட்டின் மொத்த கழிவுநீர் உற்பத்தி ஒரு நாளைக்கு 72368 மில்லியன் லிட்டர் ஆகவும், நிறுவப்பட்டுள்ள சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 31841 மில்லியன் லிட்டர் ஆகவும், நிறுவப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் எண்ணிக்கை 1469 ஆகவும், செயல்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 26869 மில்லியன் லிட்டர் ஆகவும் உள்ளது.

 

தமிழ்நாட்டின் மொத்த கழிவுநீர் உற்பத்தி ஒரு நாளைக்கு 6421 மில்லியன் லிட்டர் ஆகவும், நிறுவப்பட்டுள்ள சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 1492 மில்லியன் லிட்டர் ஆகவும், நிறுவப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் எண்ணிக்கை 63 ஆகவும், செயல்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 1492 மில்லியன் லிட்டர் ஆகவும் உள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779799

                                                     ****************

 




(Release ID: 1779921) Visitor Counter : 150


Read this release in: English