ஜல்சக்தி அமைச்சகம்
ஆறுகளில் ஏற்படும் மாசு குறித்த தகவல்கள்
Posted On:
09 DEC 2021 5:19PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மாநகரங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத மற்றும் ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஆறுகளில் கலப்பதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆறுகள் பெருமளவு மாசுபடுகின்றன.
மண்ணரிப்பு, கற்கள், வேளாண் கழிவுகள், திறந்தவெளி மலம் கழித்தல், திடக்கழிவு உள்ளிட்டவையும் ஆறுகளின் மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் தண்ணீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது. தேசிய தண்ணீர் தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4294 கண்காணிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.
நாட்டில் உள்ள பல்வேறு ஆறுகளில் கலந்துள்ள கன உலோகம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779788
*****************
(Release ID: 1779920)
Visitor Counter : 175