எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகில இந்திய அளவில் ஒட்டு மொத்த கொண்டு செல்லுதல் மற்றும் வணிக இழப்புகளை 12.15% அளவிற்கு குறைப்பதை திருத்தியமைக்கப்பட்ட விநியோக முறை நோக்கமாக கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 09 DEC 2021 4:13PM by PIB Chennai

பயன்பாட்டாளர்களுக்கு மின் விநியோகத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு திருத்தியமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.3,03,758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ரூ.97,631 கோடி ஜிபிஎஸ் மதிப்பிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஒட்டு மொத்த கொண்டு செல்லுதல் மற்றும் வணிக இழப்புகளை 12.15% அளவிற்கு குறைப்பதையும் விநியோகத்திற்கான சராசரி செலவு – எதிர்கால சராசரி வருவாய் இடையேயான இடைவெளியை 2024 – 25-க்குள் முற்றிலுமாக களைவதையும் திருத்தியமைக்கப்பட்ட விநியோக முறை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு உரியதாகும். மாநிலத்தின் குறிப்பிட்ட தேவைகளை சந்திக்க தேவையான பணிகளையும், நடவடிக்கைகளையும் தாராளமாக மேற்கொள்ள இந்தத் திட்டம் வகை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி விடுவிப்பு விளைவுகளோடும், சீர்திருத்தங்களோடும் இணைக்கப்பட்டதாகும்.

இதனை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் விரிவான திட்ட அறிக்கைகளையும் அனுப்புவதற்கான கடைசி நாள் 31.12.2021 ஆகும்.

மக்களவையில் இன்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779726

****

 


(रिलीज़ आईडी: 1779861) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English