சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள்
प्रविष्टि तिथि:
09 DEC 2021 3:40PM by PIB Chennai
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளாக 5803 கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2016-ல் 5755 விபத்துகளில் 2074 பேரும், 2017-ல் 5752 விபத்துகளில் 2096 பேரும், 2018-ல் 5071 விபத்துகளில் 1796 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளைக் குறைக்க சாலைப் பாதுகாப்பு அடிப்படையில் பல்வேறு நடைமுறை உத்திகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் / மாதம் கடைப்பிடிப்பது, சாலை விதிகள் மற்றும் அவற்றை பயன்படுத்துதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அண்மையில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்த) சட்டம் 2019 மூலம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாலை விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மக்களவையில் இன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779717
****
(रिलीज़ आईडी: 1779854)
आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English