சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வைக்கோல் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசினைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
09 DEC 2021 3:36PM by PIB Chennai
தேசியத் தலைநகர் பகுதியில் (என்சிஆர்) வைக்கோல் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுப் பிரச்சனையை அரசு கடுமையானதாக எடுத்துக் கொண்டுள்ளது. என்சிஆர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் காற்றின் தர நிர்வாகம் குறித்த ஆணையம் வைக்கோல் உள்ளிட்ட கழிவுகள் எரிப்பதை தீவிரமாகத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளது.
வைக்கோல் உள்ளிட்ட கழிவுகள் எரிக்கப்படுவதை தடுப்பது, தீவிரமாகக் கண்காணிப்பது, வைக்கோல் அளவைக் குறைப்பது போன்றவை இந்த செயல் திட்டத்தில் அடங்கும்.
2018-19 முதல் 2021-22 வரையிலான காலத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தேசிய தலைநகர் பிரதேசம் தில்லி ஆகியவற்றுக்குக் காற்று மாசை குறைப்பதற்கான செயல் திட்டத்திற்கு ரூ.2440.07 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.95 லட்சத்திற்கும் அதிகமாக வைக்கோல் உள்ளிட்ட கழிவுகளைக் கையாள்வதற்கான எந்திரங்கள் வாடகை மையங்கள் மூலம் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கழிவுப் பொருள்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவ்பே இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779712
*****
(Release ID: 1779836)