ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய மருந்து பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒப்புதல்கள்

Posted On: 09 DEC 2021 2:57PM by PIB Chennai

இந்திய மருந்து துறை உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல முன்னேறிய பொருளாதாரங்களில் இது முன்னிலையில் உள்ளது.

மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அடிப்படை மூலப்பொருட்களின் இறக்குமதியை நாடு கணிசமாக சார்ந்துள்ளது. சில குறிப்பிட்ட மொத்த மருந்துகளில், இறக்குமதி சார்பு 80 முதல் 100% வரை உள்ளது.

இத்துறையில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் - முக்கிய தொடக்கப் பொருட்கள்/ மருந்து இடைநிலைகள் மற்றும் செயல்மிகு மருந்துப் பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை மருந்துகள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 2020-21 முதல் 2029-30 வரை ரூ. 6,940 கோடி மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், அல்கிமியா பார்ம-கெம், குளோபெலா இண்டஸ்ட்ரீஸ், அல்டா லேபராட்டரீஸ், அவிரான் பார்மாகெம், கே பி மனிஷ் குளோபல் இன்க்ரீடியண்ட்ஸ், சுதர்சன் பார்மா, ஹானர் லேப் ஆகியவற்றின் எட்டு ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த முதலீடு ரூ 151.12 கோடி ஆகும். இவற்றின் மூலம் 1951 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1779692


(Release ID: 1779795) Visitor Counter : 198


Read this release in: English