வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன

தூய்மை இந்தியா நகர்ப்புறத் திட்டத்தின் கீழ், நகராட்சிகளின் திடக்கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுவது 70 சதவீதம் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 09 DEC 2021 2:34PM by PIB Chennai

நகர்ப்புறங்களின் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவது, திடக்கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவது ஆகிய நோக்கத்திற்காக 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது தூய்மை இந்தியா நகர்ப்புறத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 4,372 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்,  4,371 (மேற்கு வங்க மாநிலம் புருலியா தவிர)  திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத அமைப்புகளாக  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு 18 சதவீதமாக இருந்த நகர்ப்புற திடக்கழிவு மறுசுழற்சி தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. சண்டிகர், சதீஷ்கர், இமாச்சலப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இது 100 சதவீதமாக உள்ளதுதமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு  பயன்படுத்தப்படுவதாக மக்களவையில், நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்து மூலம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779680


(रिलीज़ आईडी: 1779775) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English