புவி அறிவியல் அமைச்சகம்
சூழல் மீதான புவி வெப்பமயமாதலின் தாக்கம்
प्रविष्टि तिथि:
09 DEC 2021 2:02PM by PIB Chennai
சமீபத்திய ஆண்டுகளில் புயல்கள் மற்றும் மிக அதிகமான மழைப் பொழிவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. 1891 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புயல்கள் குறித்த பகுப்பாய்வில், அண்மைக்காலமாக அரபிக்கடலில் அதிதீவிரப் புயல்கள் அடிக்கடி உருவாகியுள்ளதைக் காணமுடிகிறது. இருப்பினும் அதிதீவிரப் புயல்களால் பாதிக்கப்படுவது வங்கக் கடல் பிராந்தியத்தின் கரையோரப் பகுதிகள் என்பது தெளிவாகியிருக்கிறது.
அரபிக் கடலில் உருவாகும் புயல்கள் ஓமன், ஏமன் போன்ற நாடுகளின் கடலோரப் பகுதிகளிலும், குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களிலும் கரையைக் கடந்துள்ளன. வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில், உருவாகும் புயல்கள் கரையைக் கடக்கும் போது உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்றன. மேற்கு வங்கம். ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய கடலோர மாநிலங்களில் இந்தப் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை காரணமாக புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் போன்றவற்றின் செயல் திறனால் உயிரிழப்புகள் குறைந்துள்ள போதிலும், சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் இன்னும் அதிகமாகவே உள்ளது.
அதிக வெப்ப நிகழ்வுகளுக்கான வெப்ப நடவடிக்கைத் திட்டம் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை முறை மற்றும் முன்னேற்பாடுகளைக் கொண்டதாகும். வெப்பத்தால் ஏற்படும் உடல்நலத் தாக்கங்களை இது குறைக்க உதவும். மேலும் என்டிஎம்ஏ மற்றும் ஐஎம்டி ஆகியவை 23 மாநிலங்களுடன் உயர் வெப்பத்தால் ஏற்படும் சூழலைக் குறைக்க இணைந்து செயல்பட்டு வருகின்றன.
2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஐஎம்டி காலை 8 மணிக்கு கூடுதல் வானிலை அறிக்கையை வெளியிட்டு வருவதாக மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779658
(रिलीज़ आईडी: 1779708)
आगंतुक पटल : 209