பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

பஞ்சாயத்துக்களை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு

Posted On: 08 DEC 2021 2:46PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பட்டீல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பஞ்சாயத்துகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். இருப்பினும், பஞ்சாயத்துகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

2018-19 முதல் செயல்படுத்தப்படும் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளான கிராம பஞ்சாயத்து பவன்கள், கணினிகள் மற்றும் சாதனங்கள் போன்றவற்றிற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாநிலங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

மின்-பஞ்சாயத்து மிஷன் மோட் திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், செயல்படுத்தல், கணக்கு, கண்காணிப்பு, சமூக தணிக்கை மற்றும் விநியோகம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளின் செயல்பாட்டின் பல்வேறு அம்சங்களுக்கான பொதுவான பயன்பாடுகளின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ம் ஆண்டில் ரூ 57.6 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ 5.3 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ 56.875 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ 39.8922 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15-வது நிதி ஆணையத்தின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2020-21-ம் ஆண்டில் ரூ 3607 கோடியும், 2021-22-ல் ரூ 2666 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ 2761 கோடியும், 2023-24-ல் 2791 கோடியும், 2024-25-ல் ரூ 2957 கோடியும், 2025-26-ல் ரூ 2884 கோடியும் என மொத்தம் ரூ 17666 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779217      

                                                                                       **********



(Release ID: 1779446) Visitor Counter : 228


Read this release in: English , Urdu , Bengali