சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய சாலை நிதியின் பயன்பாடு: தமிழகம் மற்றும் புதுவைக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள்
Posted On:
08 DEC 2021 2:55PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் முதன்மைப் பொறுப்பேற்றுள்ளது. இது தவிர மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது.
மாநில சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு அளவுகோல்களை நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்த அமைச்சகம், 2020 ஜனவரியில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதை அனுப்பியது.
சிஆர்ஐஎஃப் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ம் ஆண்டில் ரூ 416.88 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ 262.37 கோடியும், 2020-21-ல் ரூ 503.17 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ 350.15 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் 1 படி, தமிழ்நாட்டின் செலவிடப்படாத நிதியாக ரூ 3.83 கோடி உள்ளது.
சிஆர்ஐஎஃப் திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ 4 கோடியும், 2020-21-ல் ரூ 8.47 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ 5.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் 1 படி, செலவிடப்படாத நிதியாக ரூ 29.75 கோடி உள்ளது.
ஈஐ மற்றும் ஐஎஸ்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ம் ஆண்டில் ரூ 75 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ 13 கோடியும், 2020-21-ல் ரூ 34 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ 9.71 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈஐ மற்றும் ஐஎஸ்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டில் ரூ 66.27 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ 11.21 கோடியும், 2020-21-ல் ரூ 28.34 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ 9.66 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779229
****
(Release ID: 1779229)
(Release ID: 1779315)
Visitor Counter : 219