ஆயுஷ்

ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற பழங்கால ஆயுர்வேத அறிவை பயன்படுத்துதல்

Posted On: 07 DEC 2021 4:15PM by PIB Chennai

புதுதில்லி, டிசம்பர் 7, 2021:

ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற, பல ஆய்வு படிப்புகளில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பழங்கால ஆயுர்வேத அறிவின் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது. முழுமையான ஊட்டச்சத்தை உறுதி செய்வதில், ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  ஆயுர்வேத சிகிச்சையில் பத்தியவஸ்தா முக்கியமான அம்சம். தனிநபர்களுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகளுடன்பல வகையான உணவுமுறை வழிகாட்டுதல்கள் ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஊட்டசத்து தேவைகளை நிறைவேற்ற, பாரம்பரிய ஆயர்வே அறிவை பயன்படுத்துவதில் கீழ்கண்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது. 

* ஆயுர்வேதத்தில் ஊட்டச்சத்து ஆலோசனை என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

* 2021ம் ஆண்டில், ஊட்டசத்துக்கான ஆயுர்வேதம் என்ற தலைப்பில் 6-வது ஆயுர்வேத தினம் கொண்டாப்பட்டது. இது குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது.

* ஆயுஷ் அடிப்படையிலான உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், நாட்டில் ஊட்டசத்து இலக்கை அடையவும், ஆயுஷ் அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778866



(Release ID: 1779168) Visitor Counter : 113


Read this release in: English , Urdu