வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4,48,955 வீடுகள் ரூ.6,654.35 கோடி மத்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன
Posted On:
06 DEC 2021 3:54PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்துபூர்வமாகஅளித்த பதிலில் கூறியதாவது:
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் கடந்த 2015-16ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள மொத்த வீடுகள் ஆண்டு வாரியாக கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2020-21ம் நிதியாண்டில் 1,20,719 வீடுகளும், புதுச்சேரியில் 2,820 வீடுகளும், 2021-22ம் நிதியாண்டில் தமிழகத்தில் 26,888 வீடுகளும். புதுச்சேரியில் 394 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக தமிழகத்துக்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.1,612.08 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 49.75 கோடியும்,
2021-22ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.707.94 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 8.36 கோடியும் மத்திய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வழங்கப்பட்ட நிதியுதவிகளை கீழ்கண்ட இணைப்பில் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778478
*************
(Release ID: 1778607)
Visitor Counter : 150