சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழக முன்னாள் ஆளுநர் முன்னாள் ரோசய்யா மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் முருகன் இரங்கல்

Posted On: 04 DEC 2021 1:04PM by PIB Chennai

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர்  மற்றும் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவிற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு; மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர்  மற்றும் தமிழக முன்னாள் ஆளுநர் திரு.ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அவரது மறைவுக்கு எனது  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”, என்று மத்திய இணை அமைச்சர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.


(Release ID: 1777965)
Read this release in: English