ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாசுபட்ட ஆறுகளின் கணக்கெடுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2021 4:24PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தி பதிலில் கூறியதாவது:

 மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநிலங்களில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியங்களுடன் இணைந்து, நதி நீர்களின் தரத்தை கண்காணித்து வருகிறது.  மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ம் ஆண்டு  வெளியிட்ட அறிக்கைப்படி 351 மாசுபட்ட ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாநிலம் வாரியாக மாசுபட்ட ஆறுகளின் விவரம் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. நதிகளை சுத்தப்படுத்துவது தொடர்ச்சியான நடைமுறை. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு நதிகளில் கலப்பதை உறுதி செய்யும் பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777261

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1777563) வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi