ஜல்சக்தி அமைச்சகம்
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்
Posted On:
02 DEC 2021 4:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தி பதிலில் கூறியதாவது:
தண்ணீர் அதிகம் உள்ள ஆற்று பகுதியில் இருந்து, தண்ணீர் குறைவாக உள்ள ஆறுகளுக்கு தண்ணீரை அனுப்ப கடந்த 1980ம் ஆண்டு அப்போதைய நீர்பாசனத்துறை அமைச்சகம் தேசிய முன்னோக்கு திட்டத்தை உருவாக்கியது. தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ், தேசிய நீர் மேம்பாட்டு முகமை, இணைப்பதற்கு சாத்தியமான 30 ஆறுகளை அடையாளம் கண்டது. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, கென்-பெட்வா, நர்மதா, நேத்ராவதி, பம்பை உட்பட பல நதிநீர் இணைப்பு திட்டங்களின் விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நதிநீர் இணைப்பு திட்டங்கள் அமலாக்கம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சம்மதத்தை பொருத்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777259
(Release ID: 1777464)