பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்

Posted On: 01 DEC 2021 5:05PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

* நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, தேசிய ஊட்டச் சத்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.  5,312 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,985 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.  திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10.22 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 6.61 லட்சம் பேர் டிஜிட்டல் தளத்தில் பயிற்சி பெறுகின்றனர். இதுவரை 8.3 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் / உதவியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை அளவிடுவதற்காக , மாதந்தோறும் முறையே ரூ.500, ரூ.250  என ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து புத்தாக்க திட்டத்தின் கீழ் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 50க்கும் மேற்பட்ட புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

* பெண்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் முனைவை மேம்படுத்த பிரதமரின் முத்ரா திட்டம், தொடக்க நிறுவன திட்டம், திறன் இந்தியா திட்டம் ஆகியவை தொடங்கப்படுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம், பண்ணை சாரா துறையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் என்ற பெயரில் கடனுடன் கூடிய மானிய திட்டத்தை அமல்படுத்துகிறது.  இதன் மூலம் ஊரக பகுதிகளில் திட்ட செலவில் 25 சதவீதத்தையும், நகர்ப்புறத்தில் 15 சதவீதத்தையும் பயனாளிகள் மானியமாக பெற முடியும்.

* உளவியல் மற்றும் சமூக உதவி மையமான நிம்ஹன்ஸ்-ல் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் துயரங்களை போக்குவதற்கான ஆலோசனைகளை  08046110007 என்ற போன் எண் மூலம் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள்  உளவியல் ஆலோசனை பெற்றுள்ளனர்.

* குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை மேம்படுத்த அங்கன்வாடி சேவைகள், வளர்இளம் பெண்களுக்கான திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அமல்படுத்துகிறது.

* அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13,89,110 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் 54, 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அங்கன்வாடி சேவை திட்டம் மூலம் தமிழகத்தில் 34,15,098 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.

*அங்கன்வாடி சேவைகளின் கீழ் துணை ஊட்டசத்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. 6- 36 மாத குழந்தைகளுக்கு நுண்பூட்டசத்து உணவு பொருட்கள் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்டுகின்றன. 3-6 வயது குழந்தைகளுக்கு பால், வாழைப்பழம் மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சூடான உணவு வழங்கப்படுகின்றன. ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 முதல் 10 கிராம் அளவில் நுண்ணாட்ட சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கர்ப்பிணி  பெண்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்டுகின்றன.

 

* பெண்களின் மேம்பாட்டுக்காக, பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தேசிய சமூக உதவி திட்டம், பிரதமரின் வியாய் வந்தனா திட்டம், சமக்ரா சிக்‌ஷா திட்டம், கல்வி உதவித் தொகை திட்டம், பாபு ஜாக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம், தூய்மை பள்ளி திட்டம் போன்றவற்றை மத்திய அரசு மேற்கொள்கிறது. 

* கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக ஜனனி சுரக்‌ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஜனனி சுரக்‌ஷா திட்டம் மூலம், தகுதியான பயனாளிகள் ரூ.6,000 பெறுகின்றனர்.

* தமிழ்நாட்டில் 2020-21ம் ஆண்டில் அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் ரூ. 632 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

* குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்துக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டது.  குழந்தை பாதுகாப்புசேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. ரூ.709  கோடி  வழங்கப்பட்டுள்ளது.

 

* கொவிட் தொற்று காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்னைகளை தீர்க்க பல நடவடிக்கைகளை பெண்களுக்கான தேசிய ஆணையம் மேற்கொண்டது. www.ncw.nic.in என்ற இணையதளம், 7217735372 என்ற வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் புகார்கள் பெறப்பட்டு, காவல்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1776876


(Release ID: 1777064) Visitor Counter : 262


Read this release in: English , Urdu