அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டாண்டுகளில் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கு ஏழு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
01 DEC 2021 1:03PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்படுவதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., சமூகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முறைப்படியானத் தலையீடு செய்ய 2019-2020-ல் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டாண்டுகளில் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கு ஏழு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று மக்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
ஷெட்யூல்டு பழங்குடியினருக்கு நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு முறையான, பொருத்தமான, தொழில்நுட்பங்களை இந்த மையங்கள் உறுதிசெய்யும் என்று அவர் கூறினார்.
அறிவியல் தொழில்நுட்பத் தலையீட்டின் மூலம் முக்கியமான வாழ்வாதார நடைமுறைகளின் பலவீனமான இணைப்புகளைச் சரிசெய்தல், வாழ்வாதார நடைமுறைகளில் பலத்தின் அடிப்படையில், சமூக தொழில் முயற்சிகளை உருவாக்குதல், வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கு அறிவியல் தொழில்நுட்ப உள்ளீடுகள் மூலம் உள்நாட்டு அறிவுசார் நடைமுறைகளை மேம்படுத்துதல் என்ற நோக்கங்களுடன் அவர்களின் விருப்பங்கள் அமைகின்றன என்றும் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776740
****
(Release ID: 1776988)