நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்
प्रविष्टि तिथि:
01 DEC 2021 2:20PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. அதிகரித்த மின்தேவை, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்த மின் உற்பத்தி மற்றும் கனமழை காரணமாக நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட சில தடங்கல்களால், அக்டோபர் 8-ம் தேதி நிலக்கரி இருப்பு 7.2 மெட்ரிக் டன் (4 நாட்களுக்கு போதுமானது) குறைந்தது.
பின்னர் அதிகரித்த நிலக்கரி விநியோகத்தின் காரணமாக நிலக்கரி இருப்பு அதிகரிக்கத் தொடங்கி 25 நவம்பர் 2021 நிலவரப்படி 16.74 மெட்ரிக் டன்னை (9 நாட்களுக்குப் போதுமானது) எட்டியுள்ளது.
நாட்டில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக வருவாய் பகிர்தல் அடிப்படையிலான வர்த்தக ஏலம், உபரி நிலக்கரின் விற்பனைக்கு அனுமதி, சுழற்சி ஏலம், ஒற்றை சாளர அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்கள்/சம்பவங்களுக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிய, அனைத்து அபாயகரமான விபத்துகள், பெரிய விபத்துகள் மற்றும் ஆபத்தான நிகழ்வுகள் பற்றிய விசாரணைகள் சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது.
விசாரணைகளின் முடிவுகளின்படி, இதுபோன்ற விபத்துகள் அல்லது ஆபத்தான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க சுரங்கச் சட்டம், 1952-ன் விதிகளின்படி பொருத்தமான நடவடிக்கைகள் அல்லது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப சுற்றறிக்கைகள், தேசிய அளவிலான முத்தரப்பு அமைப்பு, அறிவியல் பூர்வமான ஆய்வுகள், அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
தேசிய கனிம சரக்கு நிலவரங்களின் படி, 1 ஏப்ரல் 2015 அன்று நாட்டில் இருந்த முதன்மை தங்கத் தாதுவின் மொத்த வளங்கள் 654.74 டன் தங்க உலோகத்துடன் சேர்ந்து 501.83 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் பீகாரில் 222.885 மில்லியன் டன்கள் (44%) உள்ளது.
பீகாரில் உள்ள தங்க வளங்கள் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு வகைப்பாடு குறியீடு-333 (128.885 மில்லியன் டன்கள் கொண்ட 21.6 டன் உலோகம்) மற்றும் குறியீடு-334 (94 மில்லியன் டன்கள் கொண்ட 16 டன் உலோகம்) ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பீகாரில் உள்ள தங்க தாதுவின் முழு வளமும் ஜமுய் மாவட்டத்தின் சோனோ பகுதியில் உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சுரங்க அமைச்சகத்துடன் இணைந்த அலுவலகமான இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு, மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் சில பகுதிகளில் தங்கத்திற்கான ஜி4 நிலை 'உளவு ஆய்வு' மற்றும் பீகாரின் கயா மாவட்டத்தில் ஜி3 நிலை 'முதற்கட்ட ஆய்வு' ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
http://https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776763
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776761
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776759
****
(रिलीज़ आईडी: 1776976)
आगंतुक पटल : 265
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English