சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஸ்டார்லிங்க் சேவைகள் நிறுவனம் அரசின் உரிமம்/ அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வலைதளத்தை மக்கள் பயன்படுத்தி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்க மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து உரிய உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். இத்தகைய உரிமம் இன்றி மேற்கூறிய நிறுவனம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த சேவைகளுக்கு சந்தா செலுத்த வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 01 DEC 2021 4:11PM by PIB Chennai

ஸ்டார்லிங்க் சேவைகள் நிறுவனம் அரசின் உரிமம்/ அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வலைதளத்தை மக்கள் பயன்படுத்தி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்க மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து உரிய உரிமம்  பெற வேண்டியது அவசியமாகும். இத்தகைய உரிமம் இன்றி மேற்கூறிய நிறுவனம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசு  கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த சேவைகளுக்கு சந்தா செலுத்த வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1776832) வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க: English