அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வீட்டில் தினமும் தியானம் செய்வது லேசான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளையின் திறனை அதிகரிக்கும்: ஆய்வு
Posted On:
24 NOV 2021 4:26PM by PIB Chennai
ஆறு மாதங்கள் தினசரி வீட்டில் தியானம் செய்வதால் லேசான அறிவாற்றல் குறைபாடு அல்லது லேசான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளையின் திறனை (கிரே மேட்டர் அளவை) அதிகரிக்கும் என்று இந்திய ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வு காட்டியுள்ளது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சத்யம் திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி, கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவரும் இயக்குநருமான டாக்டர் அமிதாபா கோஷ் தலைமையில், டாக்டர் எஸ் பாபி ராஜுவுடன் (ஐஐஐடி ஹைதராபாத்தில் உள்ள அறிவாற்றல் அறிவியல் ஆய்வகம்) இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
'ஃபிரான்டியர்ஸ் இன் ஹியூமன் நியூரோ சயின்ஸ்' இதழில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. தியானப் பயிற்சியில் தினமும் சிறிது நேரம் செலவிடுவது ஞாபக மறதி உள்ள நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
வெளியீட்டு இணைப்பு: 10.3389/fnhum.2021.728993
மேலும் தகவல்களுக்கு, டாக்டர் அமிதாபா கோஷை (amitabhaghosh269[at]gmail[dot]com) அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774609
*******
(Release ID: 1774804)
Visitor Counter : 184