சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ததாக இந்திய உணவுக் கழகம் பெருமிதம்

Posted On: 24 NOV 2021 8:18PM by PIB Chennai

சுதந்திரத்தின் போது ஏற்பட்ட சவால்கள் மற்றும் தேசம் சந்தித்த இடர்பாடுகள் குறித்து இந்திய உணவுக் கழக தென்மண்டல அலுவலகம் இன்று நடத்திய ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் நிகழ்ச்சியில் தேசிய பல்லுயிரி ஆணைய செயலாளர் திரு ஜஸ்டின் மோகன் எடுத்துரைத்தார்.

இக்கட்டான தருணங்களில் தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்த இந்திய உணவுக் கழகத்தின்  செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்  துணை தொழில்நுட்ப ஆலோசகர் திரு பல்பீர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் இந்திய உணவுக் கழக தென்மண்டல தலைமை பொதுமேலாளர் திரு சஞ்சீவ் கவுதம், செயல் இயக்குநர் திரு தல்ஜீத் சிங், பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) திரு வி ஏழுமலை ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

••••••••



(Release ID: 1774785) Visitor Counter : 102


Read this release in: English