மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கால்நடை பராமரிப்பு & பால்வளம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 17 NOV 2021 6:08PM by PIB Chennai

கிராமப்புற ஏழை மக்களின் நீடித்த வளர்ச்சிக்கான வருவாய் திரட்டுவதற்கான இலக்குகளை அடைய, மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறையும், உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.  

     விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை மற்றும் உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, இவ்விரு துறைகளால் வழங்கப்படும் பலன்களை  பால்வள தொழில் முனைவோர் / பால் பண்ணை தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதியும், உணவுப்பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர் திருமதி  புஷ்பா சுப்பிரமணியமும் கையெழுத்திட்டுள்ளனர்.

     மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை அமைச்சர் திரு புருஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர்கள் டாக்டர் எல் முருகன், திரு பசுபதி குமார் பரஸ், டாக்டர் சஞ்சீவ் குமார் பால்யான், திரு பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

***********(Release ID: 1772720) Visitor Counter : 570


Read this release in: English , Hindi