சுற்றுலா அமைச்சகம்

உள்நாட்டு இடங்களை விருப்பமான படப்பிடிப்பு மையங்களாக விளம்பரப்படுத்துவதற்கான கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மும்பையில் நடத்தின, தமிழகம் பங்கேற்பு

Posted On: 08 NOV 2021 6:44PM by PIB Chennai

திரைப்பட சுற்றுலா குறித்த கருத்தரங்கை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் சுற்றுலா அமைச்சகம் இன்று (2021 நவம்பர் 8) ஏற்பாடு செய்தது. தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் இதில் கலந்து கொண்டன.

திரைப்பட படப்பிடிப்புகளை நடத்துவதற்காக மாநிலங்களில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஃபிலிம் டூரிஸம்எனப்படும் திரைப்பட சுற்றுலா என்பது பார்வையாளர் ஒரு திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பார்த்த பிறகு அதை நேரில் பார்க்கத் தூண்டுவது ஆகும். திரைப்படங்களின் சில காட்சிகளில் தோன்றுவதன் காரணமாக பிரபலமான இடங்கள் மீது பொது மக்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை இது குறிக்கிறது. 

சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு அரவிந்த் சிங் திரைப்பட சுற்றுலா பற்றி பேசுகையில், “திரைப்பட சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிக்கும் பல மாநிலங்கள் உள்ளன என்பதை நான் சொல்ல வேண்டும். 'திரைப்பட சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த மாநிலம்' என்ற பிரிவின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தேசிய சுற்றுலா விருது மூலம் இத்தகைய முயற்சிகளை சுற்றுலா அமைச்சகம் அங்கீகரிக்கிறது,” என்றார்.

சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி பெற முதல்வர் அலுவலகத்தில் திரைப்பட ஊக்குவிப்பு அலுவலகம் ஒன்றை நிறுவுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு அபூர்வ சந்திரா பேசுகையில், “திரைப்படங்களுக்கு ஊக்கமளிக்கும் கொள்கையை 14 மாநிலங்கள் கொண்டு வந்துள்ளன. மேலும் இந்த கொள்கைகளில் சிலவற்றின் அடிப்படையில் ஒரு வரைவு மாதிரி திரைப்படக் கொள்கையை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

திரைப்படம் தயாரிப்பதற்கு 18 மாநிலங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றன என்று கூறிய திரு சந்திரா, படப்பிடிப்பை எளிமையாக்கும் சூழ்நிலையின் அவசியத்தை வலியுறுத்தினார். "ஊக்குவிப்பதை விட, எளிதாக படப்பிடிப்பு நடத்துவது மற்றும் எளிதாக அனுமதிகள் பெறுவது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஒன்பது மாநிலங்கள், படப்பிடிப்பை எளிதாக்குவதற்கும், அவற்றின் அதிகார வரம்பில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அவை மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் வெளிப்படுத்துவதற்கா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770082

****



(Release ID: 1770107) Visitor Counter : 207


Read this release in: English , Marathi