மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

6வது சர்வதேச பொது சுகாதாரம் தினம் நாளை கொண்டாடப்படுகிறது: ‘தொழில்துறை மற்றும் சுகாதாரம்’ குறித்த அனைத்து தரப்பினர் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது கால்நடை பராமரிப்புத்துறை

Posted On: 02 NOV 2021 1:16PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் வைர விழாவின் ஒரு பகுதியாக, சர்வதேச பொது சுகாதார தினத்தை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை நாளை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு தொழில்துறை மற்றும் பொது சுகாதாரம்என்ற கருப்பொருளில் அனைத்து தரப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மனிதர்கள் மற்றும் கால்நடைகள் இணைந்து வாழும் சூழலில் ஒன்றுக்கொன்று தொடர்பான சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பொதுவான சுகாதார அணுகுமுறை தேவை என்பதை இந்த பொது சுகாதார நாள் சுட்டிக் காட்டுகிறது. இந்த பொது சுகாதார கோட்பாட்டை அமல்படுத்துவதற்கு, பன்நோக்கு கூட்டு நடவடிக்கை தேவை.

இதற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு, கொள்கை உருவாக்குபவர்கள்தொழில்துறை, பொது சுகாதார நிபுணர்கள், சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் மற்றும் இவர்கள் பொது சுகாதார அணுகுமுறையை அமல்படுத்துவதில் தொழில்துறையின் பங்கு மற்றும் பொறுப்புகளை  புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை  வழங்கும்.

இந்த அமைப்பு மூலம் பொது சுகாதார அணுகுமுறையை பின்பற்றவும், இத்திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் ஈடுபடவும் அனைத்து தரப்பினரையும், இந்த அமைப்பு மூலம் சர்வதேச பொது சுகாதார தினத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அழைப்பு விடுக்கிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1768834

*****



(Release ID: 1768917) Visitor Counter : 204