சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கணித அறிவியல் மைய சொற்பொழிவு பிரபல விஞ்ஞானி பேராசிரியர் ஆர்.சிதம்பரம் சிறப்புரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 20 OCT 2021 6:51PM by PIB Chennai

நாட்டின் 75-வது சுதந்திரத் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள கணித அறிவியல் மையம், தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிரபல விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியாக, “இயற்பியல் அறிவியல்கள்: கணிதத்துடனான ஒருங்கிணைப்புஎன்ற தலைப்பில் 21, அக்டோபர் 2021 காலை 11 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.

இந்திய அணு சக்தி துறையின் முன்னாள் செயலாளரும், மத்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகருமான பிரபல இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ஆர்.சிதம்பரம் இதில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

செயற்கை  நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் அணு உலை வடிவமைப்பு போன்றவை தொடர்பாக உலகம் எதிர்கொள்ளும் அடிப்படை அறிவியல் பிரச்சனைகள் குறித்து அவர் விளக்கமளிக்க உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் https://www.imsc.res.in/akam/ என்ற இணையதள இணைப்பு மூலமாக இதில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருமதி. எஸ்.வினயலதா, பதிவாளர், கணித அறிவியல் மையம், சென்னை அவர்களை registrar@imsc.res.in என்ற மின்னஞ்சல் அல்லது +91-44-22543150 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

*****


(रिलीज़ आईडी: 1765233) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English