அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நானோ மருத்துவம்: மனித ஆரோக்கியத்திற்கான உயிர் மூலக்கூறுகள் (NBHH-2021) சிறிய மூலக்கூறுகள், பெரிய வாய்ப்புகள் !!
Posted On:
05 OCT 2021 4:43PM by PIB Chennai
‘‘நானோ மருத்துவம்: மனித ஆரோக்கியத்திற்கான உயிர் மூலக்கூறுகள் (NBHH-2021) சிறிய மூலக்கூறுகள், பெரிய வாய்ப்புகள்’’ என்ற தலைப்பிலான சர்வதேச இணைய கருத்தரங்கை தில்லி பல்கலைக்கழகத்தி்ன கிராரி மல் கல்லூரி நடத்தியது. உயிரி தொழில்நுட்பத்துறையின் நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ் தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளும் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின.
‘‘நானோ மருத்துவமாக கதிரியக்க சிகிச்சை மற்றும் கதிரியக்க பரிசோதனை’’ பற்றி பேராசிரியர் சுனில் கிருஷ்ணா பேசினார். கணையம் மற்றும் ஈரல் கட்டிகளுக்கு திறம்பட சிகிச்சையளிப்பதற்காக ஒருங்கிணைந்த தங்க நானோ துகள்கள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் பங்கை அவர் விளக்கினார்.
இந்த கருத்தரங்கம் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் இடையே, தற்போதைய மற்றும் புதிய பணிகள் குறித்த கலந்துரையாடலை ஊக்குவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761126
-----
(Release ID: 1761185)