சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி வயோ நாமன் நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
01 OCT 2021 5:30PM by PIB Chennai
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி வயோ நாமன் நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது. புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு வயோஷிரேஷ்தா சம்மான்-2021 விருதுகளை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வழங்கினார். மூத்த குடிமக்களின் நலனுக்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 அன்று சர்வதேச முதியோர் தினத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கொண்டாடுகிறது.
மூத்த குடிமக்கள் உதவி எண்ணான 14567-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்த திரு வெங்கையா நாயுடு, சேஜ் மற்றும் சேக்ரட் ஆகிய இரு தளங்களை நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட சேஜ் தளத்தின் மூலம் மூத்தோர் பராமரிப்பு துறையில் இயங்கும் தொழில்முனைவோருக்கு ஊக்கம் கிடைக்கும். சேக்ரட் தளத்தின் வாயிலாக தனியார் துறை மூலம் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்காக அமைச்சகத்திற்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், முதியோர் நலனுக்காக மூன்று முக்கிய முன்முயற்சிகளைத் தொடங்கிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தைப் பாராட்டினார். "மூத்த குடிமக்களுக்கு கவுரவமான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான உங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் உண்மையில் பாராட்டத்தக்கவை" என்று திரு நாயுடு கூறினார்.
முதியோர் நலனுக்காக அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை தமது உரையில் பட்டியலிட்ட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், தொடர்ந்து அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது என்று உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760010
*****************
(Release ID: 1760099)
Visitor Counter : 253