வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அரசின் ரூ.4,400 கோடி மூலதனம், எங்கள் சேவைகளை விரிவுபடுத்த உதவும்: இசிஜிசி நிறுவன தலைவர்

Posted On: 01 OCT 2021 2:35PM by PIB Chennai

மத்திய அரசின் ரூ.4,400 கோடி மூலதன உட்புகுத்தல் மூலம், எங்கள் சேவைகளை விரிவுபடுத்த உதவும் என ஏற்றுமதி கடன் உத்திரவாத கார்பரேஷன் (இசிஜிசி)  தலைவர் திரு எம். செந்தில் நாதன் கூறியுள்ளார்.

ஏற்றுமதி கடன் உத்திரவாத கார்பரேஷன் நிறுவனத்தில் ரூ. 4,400 கோடி  மூலதனத்தை புகுத்தவும், நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்கவும், மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் இசிஜிசி நிறுவன தலைவர் திரு. எம். செந்தில்நாதன் கூறியதாவது:

ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீடு ப்ரீமியம் தொகையை இசிஜிசி நிறுவனம் உயர்த்தாது. கொவிட் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அதே விலையில் கடன் காப்பீட்டை தொடர்ந்து வழங்கும். அனைத்து இழப்பீடு கோரிக்கைகளும், வழங்கப்படும். இதில் எந்த உயர்வு ஏற்பட்டாலும், அதை சந்திப்பதற்கான போதிய நிதி ஆதாரங்கள் உள்ளன.

மத்திய அரசிடம் இருந்து சரியான நேரத்தில் கிடைத்த உதவி போதுமானது. இது எங்கள் நிதி பலத்துக்கு வலு சேர்ப்பதோடு, எங்களது சேவைகளை விரிவுப்படுத்தவும் உதவும். உலகம் முழுவதும் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள், தங்கள் விநியோகத்தை தீவிரமாக பல்வகைப்படுத்த பார்க்கின்றன. அதனால் இந்தியா போன்ற நாட்டுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியின் விரிவாக்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப, எங்கள் சேவையை விரிவுபடுத்த முடியும்.

இவ்வாறு  இசிஜிசி நிறுவன தலைவர் திரு. எம். செந்தில்நாதன் கூறினார்.

*****************



(Release ID: 1759973) Visitor Counter : 180


Read this release in: English , Hindi , Marathi