சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தற்சார்பு சுற்றுச் சூழலுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஐந்து புதுமை நிறுவனங்களுடன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ப்ரவர்தக் தொழில்நுட்பங்கள் அமைப்பு கூட்டு முயற்சி
Posted On:
30 SEP 2021 4:23PM by PIB Chennai
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ப்ரவர்தக் தொழில்நுட்பங்கள் அமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, விண்வெளி மற்றும் ஆழ்ந்த விண்வெளியின் வணிகமயமாக்கலுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக 5 புதுமை நிறுவனங்களுடன் இணைய உள்ளது. அடுத்த தலைமுறை செயலிகளை உருவாக்கும் இந்தக் கூட்டமைப்பு இந்திய விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகள் வடிவமைப்புப் பிரிவு என்று அழைக்கப்படுகிறது.
செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, உணரிகள், எதிர்கால தலைமுறையினரின் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களான 6ஜி, செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு, தரைதள நிலையங்கள் போன்ற தற்சார்பு சுற்றுச்சூழலை கட்டமைப்பதில் இந்தக் கூட்டமைப்பு கவனம் செலுத்தும்.
இந்தப் புதிய முன்முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. விண்வெளி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்த முயற்சியில் இணையுமாறு இந்திய விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகள் வடிவமைப்புப் பிரிவு வரவேற்றுள்ளது.
https://pravartak.org.in/istac-db என்ற இணையதளத்தில் இது குறித்த கூடுதல் தகவல்களைக் காணலாம்.
*************
(Release ID: 1759690)
Visitor Counter : 149