அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுப்புறச் சூழலுக்கு ஒற்றைத் துகள் எஞ்சினின் எதிர்வினை குறித்த ஆய்வு உயிரிமருத்துவப் பொறியியலில் குறு-இயந்திரங்களைக் கட்டமைக்க உதவும்

Posted On: 21 SEP 2021 10:36AM by PIB Chennai

சுற்றுப்புறங்களின் ஓசைக்கேற்ப ஒற்றைக் கூழ்மத்துகள் பொருளைக் கொண்ட மிகச்சிறிய எஞ்சின்களின் செயல்திறன் மாறும் என்று, சுற்றுப்புறச் சூழலின் ஓசை மாறுபாடுகளுக்கு ஏற்ப மாறும் குறு-எஞ்சின்களின் எதிர்வினையை ஆய்வு செய்த ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது.

உயிரிமருத்துவப் பொறியியலில் முக்கியத்துவம் பெற்று வரும் சிக்கலான உயிரியல் சூழல்களில் செயலாற்றும் குறு-இயந்திரங்களை வரும் காலங்களில் வடிவமைப்பதில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமான பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் முன்னேறிய அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு இதனைக் கண்டறிந்துள்ளது.

ஒற்றைக் கூழ்மத்துகள் பொருள்களை லேசர் கருவி மூலம் கட்டுப்படுத்தி, மிகச் சிறிய மீட்டர் அளவிலான ஸ்டிர்லிங் எஞ்சினை (சிலிண்டர்களில் அடைக்கப்பட்ட வாயுவை சூடாக்கி, குளிர்விப்பதன் மூலம் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் எஞ்சின் போன்றது) ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியது.

வெப்பநிலை சார்ந்த ஓசைகள், வெப்பநிலை சாராத ஓசைகளுடன் கூடிய நீர்த்தேக்கங்களின் அருகில் இதன் இயக்கத்தைப் பரிசோதித்ததில், வெப்பநிலை சாராத ஓசைகளுக்கு இந்த எஞ்சின் ஏற்புடையதாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு திரு நிலோயெந்து ராய் (niloyendu@jncasr.ac.in) மற்றும் பேராசிரியர் ராஜேஷ் கணபதியைத் (rajeshg@jncasr.ac.in) தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756643

*****



(Release ID: 1756724) Visitor Counter : 209