உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 120 கோடி வழங்கப்படும்: விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா

Posted On: 16 SEP 2021 4:42PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2021 செப்டம்பர் 15 அன்று ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா விளக்கினார். ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 120 கோடி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ட்ரோன் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட ஒன்றரை மடங்கு இது அதிகமாகும். இத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 5,000 மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டு, ரூ 900 கோடி விற்றுமுதலும், 10,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

2030-க்குள் சர்வதேச ட்ரோன் மையமாக இந்தியாவை உருவாக்குவதே நோக்கமென்றும், இந்த இலக்கை எட்டுவதற்கு தேவையான ஆதரவை தொழில்துறை, சேவை விநியோகம் மற்றும் நுகர்வோருக்கு அமைச்சகம் வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ட்ரோன் சேவைகள் துறை (செயல்பாடுகள், சரக்கு போக்குவரத்து, தரவு செயல்முறை, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல) அளவில் மிகப்பெரியதாகும். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ 30,000 கோடி எனும் அளவில் இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755452

-----(Release ID: 1755567) Visitor Counter : 102


Read this release in: English , Hindi